372“அம் சுண்ண வண்ணனே!” என்றேன், நானே;
   “அடியார்கட்கு ஆர் அமுதே!” என்றேன், நானே;
“நஞ்சு அணி கண்டனே!” என்றேன், நானே;
      “நாவலர்கள் நால்மறையே!” என்றேன், நானே;
“நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும்
                   அமுதமே!” என்றேன், நானே;
“அஞ்சாதே ஆள்வானே! ஐயாற(ன்)னே!” என்று
             என்றே நான் அரற்றி நைகின்றேனே!.