645 | அழித்தவன் காண், எயில் மூன்றும் அயில்வாய் அம்பால்; ஐயாறும் இடை மருதும் ஆள்வான் தான் காண்; பழித்தவன் காண், அடையாரை; அடைவார் தங்கள் பற்று அவன் காண்; புற்று அரவம் நாணினான் காண்; சுழித்தவன் காண், முடிக் கங்கை; அடியே போற்றும் தூய மா முனிவர்க்காப் பார்மேல் நிற்க இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே. |