Try error :java.sql.SQLException: Closed Resultset: next
719நாடகம் ஆடி(இ)டம் நந்திகேச்சுரம், மா காளேச்சுரம்,
              நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்கு ஆன
கோடீச்சுரம், கொண்டீச்சுரம், திண்டீச்சுரம்,
              குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், கூறுங்கால்
ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம்,
            அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அம் தண் கானல்
ஈடு திரை இராமேச்சுரம், என்று என்று ஏத்தி
          இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே.