575 | ஆட்சி உலகை உடையாய், போற்றி! அடியார்க்கு அமுது எலாம் ஈவாய், போற்றி! சூட்சி சிறிதும் இலாதாய், போற்றி! சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய், போற்றி! மாட்சி பெரிதும் உடையாய், போற்றி! மன்னி என் சிந்தை மகிழ்ந்தாய், போற்றி! காட்சி பெரிதும் அரியாய், போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. |