6.32 திருஆரூர்
320கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி! கழல்
              அடைந்தார் செல்லும் கதியே, போற்றி!
அற்றவர்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
    அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய், போற்றி!
மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா, போற்றி!
            வானவர்கள் போற்றும் மருந்தே, போற்றி!
செற்றவர் தம் புரம் எரித்த சிவனே, போற்றி!
                திருமூலட்டானனே, போற்றி போற்றி!.