Try error :java.sql.SQLException: Closed Resultset: next
321வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய், போற்றி!
              மதயானை ஈர் உரிவை போர்த்தாய், போற்றி!
கொங்கு அலரும் நறுங்கொன்றைத் தாராய்,
     போற்றி! கொல் புலித் தோல் ஆடைக் குழகா, போற்றி!
அங்கணனே, அமரர்கள் தம் இறைவா, போற்றி!
               ஆலமர நீழல் அறம் சொன்னாய், போற்றி!
செங்கனகத் தனிக் குன்றே, சிவனே,
             போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.