6.4 திருஅதிகை வீரட்டானம்
அடையாளத் திருத்தாண்டகம்
33சந்திரனை மா கங்கைத் திரையால் மோதச்
              சடாமகுடத்து இருத்துமே; சாமவேத-
கந்தருவம் விரும்புமே; கபாலம் ஏந்து கையனே:
                        மெய்யனே; கனகமேனிப்
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே; பசு
                      ஏறுமே; பரமயோகி ஆமே;
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்கு(ம்)மே;-
          அவன் ஆகில் அதிகை வீரட்டன் ஆமே.