838கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான் தன்னை,
                   கடவூரில் வீரட்டம் கருதினானை,
பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன் தன்னை,
           பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை,
பன்னிய நால்மறை விரிக்கும் பண்பன் தன்னை,
   பரிந்து இமையோர் தொழுது ஏத்தி, “பரனே!” என்று
சென்னிமிசைக்கொண்டு அணி சேவடியினானை,
         செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.