171 | ஆல நிழல் இருப்பர்; ஆகாயத்தர்; அரு வரையின் உச்சியர்; ஆணர்; பெண்ணர்; காலம்பல கழித்தார்; கறை சேர் கண்டர்; கருத்துக்குச் சேயார், தாம், காணாதார்க்கு; கோலம்பல உடையர்; கொல்லை ஏற்றர்; கொடு மழுவர்; கோழம்பம் மேய ஈசர்; ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார்-இடைமருது மேவி இடம்கொண்டாரே. |