Try error :java.sql.SQLException: Closed Resultset: next
590செங்கண் மால் சிலை பிடித்து, சேனையோடும்
           சேதுபந்தனம் செய்து, சென்று புக்கு,
பொங்கு போர் பல செய்து, புகலால் வென்ற போர்
      அரக்கன் நெடு முடிகள் பொடி ஆய் வீழ,
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி,
   அடர்த்து, அவற்கே அருள் புரிந்த அடிகள், இந் நாள்
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி
        வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.