768விளைத்த பெரும் பத்தி கூர, நின்று மெய்
             அடியார் தம்மை விரும்பக் கண்டேன்;
இளைக்கும் கதம் நாகம் மேனி கண்டேன்;
       என் பின்கலம் திகழ்ந்து தோன்றக் கண்டேன்;
திளைக்கும் திருமார்பில் நீறு கண்டேன்; சேண்
              ஆர் மதில் மூன்றும் பொன்ற, அன்று,
வளைத்த வரிசிலையும் கையில் கண்டேன்-
            வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.