858 | பொல்லாத என் அழுக்கில் புகுவான், என்னைப் புறம் புறமே சோதித்த புனிதன் தன்னை; எல்லாரும் தன்னையே இகழ, அந் நாள், “இடு, பலி!” என்று அகம் திரியும் எம்பிரானை; சொல்லாதார் அவர் தம்மைச் சொல்லாதானை; தொடர்ந்து தன் பொன் அடியே பேணுவாரைச் செல்லாத நெறி செலுத்த வல்லான் தன்னை; திரு ஆலம்பொழிலானை, சிந்தி, நெஞ்சே!. |