725கலைக் கன்று தங்கு கரத்தான் கண்டாய்; கலை
           பயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்;
அலைக் கங்கை செஞ்சடை மேல் ஏற்றான
     கண்டாய்; அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய்;
மலைப் பண்டம் கொண்டு வரும் நீர்ப் பொன்னி
              வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய்
குலைத் தெங்கு அம்சோலை சூழ் கொட்டையூரில்
               கோடிச்சுரத்து உறையும் கோமான் தானே.