406 | சினம் திருத்தும் சிறுப் பெரியார் குண்டர் தங்கள் செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன்; தேடிப் புனம் திருத்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறி இலியேன் தனைப் பொருளா ஆண்டு கொண்டு, தனம் திருத்துமவர் திறத்தை ஒழியப் பாற்றி, தயா மூலதன் மவழி எனக்கு நல்கி, மனம் திருத்தும் மழபாடி வயிரத்தூணே!” என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே. |