439 | தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே! தத்துவனாய்ச் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே! நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே! நின்று உணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த கொலையவனே! கொல் யானைத் தோல் மேல் இட்ட கூற்றுவனே! கொடி மதில்கள் மூன்றும் எய்த சிலையவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே. |