732 | தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய்; தசரதன் தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்; இளம்பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய்; எட்டு-எட்டு இருங் கலையும் ஆனான் கண்டாய்; வளம் கிளர் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே. |