875 | மலையானை; வரும் மலை அன்று உரிசெய்தானை; மறையானை; மறையாலும் அறிய ஒண்ணாக் கலையானை; கலை ஆரும் கையினானை; கடிவானை, அடியார்கள் துயரம் எல்லாம்; உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை; புரம் மூன்று எய்த சிலையானை; வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!. |