Try error :java.sql.SQLException: Closed Resultset: next
891விண்ணவனை, மேரு வில்லா உடையான் தன்னை, மெய் ஆகிப்
                             பொய் ஆகி விதி ஆனானை,
பெண்ணவனை, ஆண் அவனை, பித்தன் தன்னை, பிணம்
                  இடுகாடு உடையானை, பெருந் தக்கோனை,
எண்ணவனை, எண்திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு
                               நிலமும் ஆகித் தோன்றும்
கண்ணவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை; கண்
                              ஆரக் கண்டு உய்ந்தேனே!.