Try error :java.sql.SQLException: Closed Resultset: next
235கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய்; காலனையும்
                     காலால் கடந்தான் கண்டாய்;
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய்; புலி
              உரி சேர் ஆடைப் புனிதன் கண்டாய்;
வெள்ளி மிளிர் பிறை முடிமேல் சூடி கண்டாய்;
        வெண் நீற்றான் கண்டாய்; நம் செந்தில் மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்-மறைக்காட்டு
                       உறையும் மணாளன் தானே.