335 | தாய் அவனை, எவ் உயிர்க்கும்; தன் ஒப்பு இல்லாத் தகு தில்லை நடம் பயிலும் தலைவன் தன்னை; மாயவனும், மலரவனும், வானோர், ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன் தன்னை; மேயவனை, பொழில் ஆரூர் மூலட்டானம், விரும்பிய எம்பெருமானை; எல்லாம் முன்னே ஆயவனை; அரநெறியில் அப்பன் தன்னை; அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!. |