162 | திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தித் திசை வணங்கச் சேவடியை வைத்தார் போலும்; விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி, வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும்; பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவாப் பரங்குன்றம் மேய பரமர் போலும்; எண் குணத்தார்; எண்ணாயிரவர் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே. |