245கொங்கு வார் மலர்க்கண்ணிக் குற்றாலன்காண்;
    கொடுமழுவன்காண்; கொல்லைவெள் ஏற்றான்காண்;
எங்கள்பால்-துயர் கெடுக்கும் எம்பிரான்காண்;
             ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான்காண்;
பொங்கு மா கருங்கடல் நஞ்சு உண்டான் தான்காண்;
   பொன் தூண் காண்; செம்பவளத்திரள் போல்வான்காண்;
செங்கண் வாள் அரா, மதியோடு உடன்
  வைத்தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.