747 | தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும்; சந்திரனைக் கலை கவர்ந்து தரித்தார் போலும்; செக்கர் ஒளி, பவள ஒளி, மின்னின் சோதி, செழுஞ் சுடர்த்தீ, ஞாயிறு, எனச் செய்யர் போலும் மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய, கழனி எல்லாம் கொக்கு இனிய கனி சிதறித் தேறல் பாயும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே. |