835உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை,
       உம்பர் மணி முடிக்கு அணியை, உண்மை நின்ற
பெருகு நிலைக் குறியாளர் அறிவு தன்னை, பேணிய
             அந்தணர்க்கு மறைப்பொருளை, பின்னும்
முருகு விரி நறுமலர் மேல் அயற்கும் மாற்கும்
   முழுமுதலை, மெய்த் தவத்தோர் துணையை, வாய்த்த
திருகுகுழல் உமை நங்கை பங்கன் தன்னை,
         செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.