371“தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா!
                   புராணனே!” என்றேன், நானே;
“மூவா மதிசூடி!” என்றேன், நானே; “முதல்வா!
               முக்கண்ணனே!” என்றேன், நானே;
“ஏ ஆர் சிலையானே!” என்றேன், நானே;
             இடும்பைக்கடல் நின்றும் ஏற வாங்கி,
“ஆவா!” என்று அருள்புரியும் ஐயாற(ன்)னே!”
        என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.