47 | சாம்பர் அகலத்து அணிந்தாய், போற்றி! தவநெறிகள் சாதித்து நின்றாய், போற்றி! கூம்பித் தொழுவார் தம் குற்றேவ(ல்)லைக் குறிக்கொண்டு இருக்கும் குழகா, போற்றி! பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன் வைத்த பண்பா, போற்றி! ஆம்பல்மலர் கொண்டு அணிந்தாய், போற்றி!-அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!. |