132நஞ்சு அடைந்த கண்டத்தர், வெண் நீறு ஆடி,
             நல்ல புலி அதள்மேல் நாகம் கட்டி,
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக,
   “பராய்த்துறையேன்” என்று ஓர் பவள வண்ணர்
துஞ்சு இடையே வந்து, துடியும் கொட்ட,
   துண்ணென்று எழுந்திருந்தேன்; சொல்லமாட்டேன்;
புன்சடையின்மேல் ஓர் புனலும் சூடி, “புறம்பயம்
                 நம் ஊர்” என்று போயினாரே!