579 | முடி ஆர் சடை மேல் மதியாய், போற்றி! முழுநீறு சண்ணித்த மூர்த்தி, போற்றி! துடி ஆர் இடை உமையாள் பங்கா, போற்றி! சோதித்தார் காணாமை நின்றாய், போற்றி! அடியார் அடிமை அறிவாய், போற்றி! அமரர் பதி ஆள வைத்தாய், போற்றி! கடி ஆர் புரம் மூன்றும் எய்தாய், போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. |