357 | மருதங்களா மொழிவர், மங்கையோடு; வானவரும் மால் அயனும் கூடி, தங்கள் சுருதங்களால்-துதித்து, தூநீர் ஆட்டி, தோத்திரங்கள் பல சொல்லி, தூபம் காட்டி, “கருதும் கொல் எம்பிரான், செய் குற்றேவல்?” என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து, விகிர்தங்களா நடப்பர், வெள் ஏறு ஏறி; வெண்காடு மேவிய விகிர்தனாரே. |