6.87 திருச்சிவபுரம்
திருத்தாண்டகம்
861வானவன் காண்; வானவர்க்கும் மேல் ஆனான் காண்;
          வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண்; ஆன் ஐந்தும் ஆடினான் காண்; ஐயன்
                    காண்; கையில் அனல் ஏந்தி ஆடும்
கானவன் காண்; கானவனுக்கு அருள் செய்தான் காண்;
                  கருதுவார் இதயத்துக் கமலத்து ஊறும்
தேன் அவன் காண்; சென்று அடையாச் செல்வன் தான் காண்;
        சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.