387 | ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய், நீயே; அளவு இல் பெருமை உடையாய், நீயே; பூவினில் நாற்றம் ஆய் நின்றாய், நீயே; போர்க் கோலம் கொண்டு எயில் எய்தாய், நீயே; நாவில் நடு உரை ஆய் நின்றாய், நீயே; நண்ணி அடி என்மேல் வைத்தாய், நீயே; தேவர் அறியாத தேவன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!. |