554 | வானத்தார் போற்றும் மருந்தே, போற்றி! வந்து என்தன் சிந்தை புகுந்தாய், போற்றி! ஊனத்தை நீக்கும் உடலே, போற்றி! ஓங்கி அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி! தேன(த்)த்தை வார்த்த தெளிவே, போற்றி! தேவர்க்கும் தேவனாய் நின்றாய், போற்றி! கானத் தீ ஆடல் உகந்தாய், போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. |