| 149 | வித்து ஆம்; முளை ஆகும்; வேரே தான் ஆம்;            வேண்டும் உருவம் ஆம்; விரும்பி நின்ற   பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும்(ம்) ஆம்;         பால் நிறமும் ஆம்; பரஞ்சோதி தான் ஆம்;   தொத்து ஆம் அமரர்கணம் சூழ்ந்து போற்றத்        தோன்றாது, என் உள்ளத்தின் உள்ளே நின்ற   கத்து ஆம்; அடியேற்குக் காணா காட்டும் கண்                    ஆம்-கருகாவூர் எந்தைதானே. |