| 286 | இந்திரத்தை இனிது ஆக ஈந்தார்போலும்;      இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர்போலும்;   சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார்போலும்;               தூத் தூய திருமேனித் தோன்றல்போலும்;   மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார்போலும்;             மா நாகம் நாண் ஆக, வளைத்தார்போலும்;   அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார்போலும்-                 அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |