Try error :java.sql.SQLException: Closed Resultset: next
6.67 திருக்கீழ்வேளூர்
திருத்தாண்டகம்
671ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன் தன்னை,
       ஆன் அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க
தாளானை, தன் ஒப்பார் இல்லாதானை,
          சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த
தோளானை, தோளாத முத்து ஒப்பானை, தூ
         வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த
கீளானை, கீழ் வேளூர் ஆளும் கோவை,
           கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.