| 779 | அல்லும் பகலும் ஆய் நின்றார் தாமே; அந்தியும்                             சந்தியும் ஆனார் தாமே;   சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே;               தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே;   பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே;                      பழனை பதியா உடையார் தாமே;   செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு                  ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. |