| 7 | வரும் பயனை, எழு நரம்பின் ஓசையானை, வரை                 சிலையா வானவர்கள் முயன்ற வாளி  அரும் பயம் செய் அவுணர் புரம் எரியக் கோத்த    அம்மானை, அலைகடல் நஞ்சு அயின்றான் தன்னை,  சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில்         -துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்  பெரும்பயனை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள்                            எல்லாம் பிறவா நாளே. |