116 | இகழும் ஆறு எங்ஙனே? ஏழைநெஞ்சே! இகழாது பரந்து ஒன்று ஆய் நின்றான் தன்னை, நகழ மால்வரைக்கீழ் இட்டு, அரக்கர்கோனை நலன் அழித்து நன்கு அருளிச்செய்தான் தன்னை, திகழும் மா மதகரியின் உரி போர்த்தானை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை, நிகழுமா வல்லானை, நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!. |