42 | எழுந்த திரை நதித் துவலை நனைந்த திங்கள் இளநிலாத் திகழ்கின்ற வளர்சடையனே; கொழும் பவளச்செங்கனிவாய்க் காமக்கோட்டி கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட தழும்பு உளவே; வரைமார்பில் வெண்நூல் உண்டே; சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி அழுந்திய செந்திரு உருவில் வெண் நீற்றானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே. |