Try error :java.sql.SQLException: Closed Resultset: next
441கண்ணவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே!
           காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே!
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள் செய்வானே!
               வேதனாய் வேதம் விரித்திட்டானே!
எண்ணவனே! எண்ணார் புரங்கள் மூன்றும்
          இமையாமுன் எரி கொளுவ நோக்கி நக்க
திண்ணவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ்
            ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.