580 | போற்று இசைத்து உன் அடி பரவ நின்றாய், போற்றி! புண்ணியனே, நண்ணல் அரியாய், போற்றி! ஏற்று இசைக்கும் வான்மேல் இருந்தாய், போற்றி! எண்ணாயிரம்-நூறு பெயராய், போற்றி! நால்-திசைக்கும் விளக்கு ஆய நாதா, போற்றி! நான்முகற்கும் மாற்கும் அரியாய், போற்றி! காற்று இசைக்கும் திசைக்கு எல்லாம் வித்தே, போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. |