Try error :java.sql.SQLException: Closed Resultset: next
535மாலாலும் அறிவு அரிய வரதர் போலும்; மறவாதார் பிறப்பு
                           அறுக்க வல்லார் போலும்;
நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும்; நாம
                  எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும்;
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும்;
            வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்;
ஆலாலம் மிடற்று அடக்கி அளித்தார் போலும்
             அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.