Try error :java.sql.SQLException: Closed Resultset: next
652நேசன் காண், நேசர்க்கு; நேசம் தன்பால் இல்லாத
                          நெஞ்சத்து நீசர் தம்மைக்
கூசன் காண்; கூசாதார் நெஞ்சு தஞ்சே
   குடிகொண்ட குழகன் காண்; அழகு ஆர் கொன்றை-
வாசன் காண்; மலை மங்கை பங்கன் தான்
     காண்; வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும்
ஈசன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
          ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.