Try error :java.sql.SQLException: Closed Resultset: next
928நீர் ஆகி, நீள் அகலம் தானே ஆகி, நிழல் ஆகி, நீள்
                           விசும்பின் உச்சி ஆகி,
பேர் ஆகி, பேருக்கு ஓர் பெருமை ஆகி, பெரு
            மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி,
ஆரேனும் தன் அடைந்தார் தம்மை எல்லாம்
             ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார் தாம்
பார் ஆகி, பண் ஆகி, பாடல் ஆகி, பரஞ்சுடர் ஆய்,
                    சென்று அடிகள் நின்ற ஆறே!.