246 | கார் ஏறு நெடுங்குடுமிக் கயிலாயன்காண்; கறைக்கண்டன்காண்; கண் ஆர் நெற்றியான்காண்; போர் ஏறு நெடுங்கொடி மேல் உயர்த்தினான்காண்; புண்ணியன்காண்; எண்ண(அ)ரும் பல் குணத்தினான்காண்; நீர் ஏறு சுடர்ச் சூலப்படையினான்காண்; நின்மலன்காண்; நிகர் ஏதும் இல்லாதான்காண்; சீர் ஏறு திருமால் ஓர்பாகத்தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே. |