487 | நெதி அவன் காண், யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண், வேதியன் காண், நினைவார்க்கு என்றும் கதி அவன் காண், கார் அவன் காண், கனல் ஆனான் காண், காலங்கள் ஊழியாக் கலந்து நின்ற பதி அவன் காண், பழம் அவன் காண், இரதம் தான் காண், பாம்போடு திங்கள் பயில வைத்த மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே. |