754 | செறி கொண்ட சிந்தை தனுள் தெளிந்து தேறித் தித்திக்கும் சிவபுவனத்து அமுதம் போலும்; நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக, நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும்; மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும்; மதில் இலங்கைக் கோன் மலங்க, வரைக்கீழ் இட்டு, குறி கொண்ட இன் இசை கேட்டு, உகந்தார் போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே. |