Try error :java.sql.SQLException: Closed Resultset: next
766பாலின் மொழியாள் ஓர் பாகம் கண்டேன்;
             பதினெண்கணமும் பயிலக் கண்டேன்;
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன்; நெற்றி-நுதல்
                   கண்டேன்; பெற்றம் கண்டேன்;
காலைக் கதிர் செய் மதியம் கண்டேன்; கரந்தை
                திருமுடிமேல்-தோன்றக் கண்டேன்;
மாலைச் சடையும் முடியும் கண்டேன்-வாய்மூர்
                    அடிகளை நான் கண்ட ஆறே!.