695அடைந்தார் தம் பாவங்கள், அல்லல், நோய்கள்,
          அருவினைகள், நல்குரவு, செல்லா வண்ணம்
கடிந்தானை; கார்முகில் போல் கண்டத்தானை;
         கடுஞ் சினத்தோன் தன் உடலை நேமியாலே;
தடிந்தானை; தன் ஒப்பார் இல்லாதானை;
         தத்துவனை; உத்தமனை; நினைவார் நெஞ்சில்
படிந்தானை; பள்ளியின் முக்கூடலானை;
              பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.