910 | நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக் கண்டு, நிலை தளர ஆயிரம் மா முகத்தினோடு பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயிலக் கண்டு, பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர்- தாம் திருத்தித் தம் மனத்தை ஒருக்காத் தொண்டர்! தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் “பூந்துருத்தி பூந்துருத்தி” என்பீர் ஆகில், பொல்லாப் புலால்-துருத்தி போக்கல் ஆமே. |